இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிவுகள் காஷ்மீரில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிவுகள் காஷ்மீரில் கண்டுபிடிப்பு
இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிவுகள் காஷ்மீரில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் உலோகம் ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், அங்கு பூமிக்கு அடியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்தியாவில் லித்திய படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.


மேலும் லித்தியம், தங்கம் உள்ளிட்ட 51 கனிமத் தொகுதிகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கம் மற்றும் பொட்டாஷ், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள், ஜம்மு & காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் பரவியிருக்கின்றன. இந்த நிதியாண்டில், 12 கடல் கனிம ஆய்வுத் திட்டங்கள், 318 கனிம ஆய்வுத் திட்டங்கள் உட்பட 966 திட்டங்களை  மேற்கொள்ள இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லித்தியம் ஒரு இரும்பு அல்லாத உலோகம் ஆகும். மின்சார வாகனங்கள், செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை  தயாரிப்பதற்கு மூலக்கூறாக இந்த லித்தியம் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com