அரசு இணைய பக்கத்தில் 40 நாட்களில் 69 லட்சம் பேர்  வேலைக்காக பதிவு

அரசு இணைய பக்கத்தில் 40 நாட்களில் 69 லட்சம் பேர்  வேலைக்காக பதிவு

அரசு இணைய பக்கத்தில் 40 நாட்களில் 69 லட்சம் பேர்  வேலைக்காக பதிவு
Published on

ஜூலை 11-ம் தேதி பிரதமரால் தொடங்கப்பட்ட அரசின் வேலைவாய்ப்பு இணையப்பக்கத்தில் 40 நாட்களில் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான ஒருவார காலத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். ஆனால் வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 691 பேர் மட்டுமே.

அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தொகுத்த தரவுகளின்படி, பதிவுசெய்த 69 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 1.49 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால் அவர்களில் 7,700 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். இந்த இணையப்பக்கத்தில் பதிவுசெய்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் இல்லை. சுயதொழில் செய்யும் தையல்காரர்கள், எலக்ட்ரீசியன்கள், கள-தொழில்நுட்ப வல்லுநர்கள், தையல் இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் ஃபிட்டர்கள் ஆகியோர் வேலை தேடுவோர் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர், அதே நேரத்தில் கூரியர் டெலிவரி நிர்வாகிகள், செவிலியர்கள், கணக்கு நிர்வாகிகள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கிறது. 514 நிறுவனங்கள் இந்த இணையப்பக்கத்தில் பதிவு செய்துள்ளன, அவற்றில் 443 நிறுவனங்கள் 2.92 லட்சம் வேலைவாய்ப்புகளை வெளியிட்டுள்ளன. இதில், 1.49 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தளவாடங்கள், சுகாதாரம், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு, சில்லறை மற்றும் கட்டுமானம் ஆகியவையே சுமார் 73.4 சதவீத வேலைகளை வழங்கும் துறைகளாகும்.

வேலை தேடும் நபர்களில் 42.3 சதவீதம் பேர் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநிலங்களை சேர்ந்தவர்கள். இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளில், 77 சதவீதத்திற்கும் அதிகமானவை கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com