மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. 8 வடமாநிலத்தவர்கள் கைது..

மத்திய அரசின் வனத்துறைத் தேர்வில் 8 பேர் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கோவையில் செயல்படும் மத்திய அரசின் வன மரபியல் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர், ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேர், ஹரியானா பிகாரைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேர்முகத் தேர்வுக்கு கைரேகையை சரிபார்த்தபோது ஆள்மாறாட்டம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, எழுத்துத் தேர்வின் போது சேகரித்த கைரேகையை நேர்முகத் தேர்வின்போது சரிபார்த்தபோது மோசடி செய்ய முயற்சித்தது கண்டறியப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com