"வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்

"வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்
"வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் திங்கள் முதல் வெயிலின் தாக்கம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸை வெப்பம் தாண்டிய நிலையில், பிற்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



அதிக வெயில் காரணமாக ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திங்கள் முதல் வெப்பம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக் காற்று மே 15 ஆம் தேதி முதல் வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதையும் படிக்க: உக்கிரமாகிறது கோடை வெயில் - தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com