தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் அறிவிப்பு
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வெப்ப மண்டல மாற்றங்களால் ஆந்திராவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் தாழ்வான பகுதியில் புயல் சுழற்சி நிலவுகிறது எனவும், ஆந்திராவை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் தொடங்கும் புயல் சுழன்று கிழக்கு-மேற்கு நோக்கி செல்கிறது எனவும் வானிலை நிலையம் தெரிவித்திருக்கிறது. இதனால் அக்டோபர் 1ஆம் தேதி வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஒரு புயல் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருக்கிறது.

இதனால் ஒடிசா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 1ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒடிசாவில் அக்டோபர் 3ஆம் தேதிவரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் ஒடிசாவில் அக்டோபர் 4ஆம் தேதி மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com