வெப்ப அலை விதிகள் மாற்றம்.. ஐஎம்டி முடிவு.. புதிய வானிலை எச்சரிக்கை!
கேரளத்தில் இந்த ஆண்டு கர்நாடகா–மஹாராஷ்டிரா கடற்பகுதியில் உருவான எதிர்-சூறாவளி அமைப்பால் இரவு வெப்பநிலை இயல்பை விட 4°C வரை உயர்ந்து, பலருக்கு வெப்பத்தாக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள விதிகளின்படி, கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸும், சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகி, அது இயல்பை விட 4 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் மட்டுமே வெப்ப அலை எச்சரிக்கை விடுக்க முடியும். மேலும், இந்தச் சூழல் ஒரு மாநிலத்தின் இரண்டு வானிலை மையங்களிலாவது பதிவாக வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.
ஆனால், கேரளம் போன்ற மாநிலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் இருந்தபோதிலும், இந்த தொழில்நுட்ப விதிகளால் அதிகாரபூர்வ வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட முடிவதில்லை. இந்த ஆண்டு கர்நாடகா- மஹாராஷ்டிரா கடற்பகுதியில் உருவான எதிர்-சூறாவளிஅமைப்பால், கேரளத்தில் இரவு நேர வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி வரை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு வெப்பத்தாக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து புதிய எச்சரிக்கை விதிகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கிடையே, வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ‘எல் நினோ' தாக்கம் நீடிப்பதால், இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவான பருவமழையே பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

