`அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும்’- வானிலை மையத்தின் ஆரஞ்சு எச்சரிக்கை

`அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும்’- வானிலை மையத்தின் ஆரஞ்சு எச்சரிக்கை
`அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும்’- வானிலை மையத்தின் ஆரஞ்சு எச்சரிக்கை

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தையொட்டி இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை என்பது, வெயிலின் தாக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. மத்திய பிரதேசத்தின் ராஜ்கர்க் பகுதியில் 45.6 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவான நிலையில், வடமேற்கு இந்தியாவில் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com