மாப்பிள்ளைக்கு 13, பெண்ணுக்கு 23... ஆந்திரா கல்யாணம்!

மாப்பிள்ளைக்கு 13, பெண்ணுக்கு 23... ஆந்திரா கல்யாணம்!

மாப்பிள்ளைக்கு 13, பெண்ணுக்கு 23... ஆந்திரா கல்யாணம்!
Published on

ஆந்திராவில் 13வயது சிறுவனின் பாதுகாப்புக்காக, 23வயது பெண்ணை அவனது தாய் திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஒரு சிறுவனும் இளம்வயது பெண்ணும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த திருமணம் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைப்பெற்றதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுவனுக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைப்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது. 

விசாரணையில், சிறுவனின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் சிறுவனின் தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாலும் தனக்கு பின்னால் சிறுவனை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக உறவினர்களிடம் சிறுவனுக்கு பெண் பார்க்கக் கூறியுள்ளார்.

இந்நிலையில் உறவினர்கள் அளித்த தகவலில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 23வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு வரன் பார்ப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணத்தை நிச்சயம் செய்துள்ளனர். இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இவர்களது திருமணம் சிறுவனின் வீட்டில் நடந்துள்ளது.

இதுகுறித்து விசாரிப்பதற்காக குழந்தைகள் நல வாரிய அதிகாரி சாரதா மற்றும் தாசில்தார் ஸ்ரீநிவாச ராவ் உள்ளிட்டோர் சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். தகவல் அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக பேசிய தாசில்தார் ஸ்ரீநிவாச ராவ், சட்டப்படி இந்த திருமணம் செல்லாது. பெற்றோர்கள் சிறுவனையும் அந்தப்பெண்ணையும் மாவட்ட அதிகாரிகளிடம் இரண்டு நாட்களுக்குள் ஒப்படைக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com