\
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்
Published on

பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  கடந்த காலங்களில் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இல.கணேசன். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட இல.கணேசன் தமிழக பாஜக தலைவராக இருந்தவர். அண்மையில் பாஜகவின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com