\
ஐஐஎம்-அகமதாபாத்தில் நிர்வாகப் பாடம் கற்கும் அமைச்சர்கள்

ஐஐஎம்-அகமதாபாத்தில் நிர்வாகப் பாடம் கற்கும் அமைச்சர்கள்

ஐஐஎம்-அகமதாபாத்தில் நிர்வாகப் பாடம் கற்கும் அமைச்சர்கள்
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் அகமதாபாத்தில் உள்ள இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனத்தில் நிர்வாகம் குறித்த பாடத்தினை பயில உள்ளனர். 

மூன்று நாள் கல்விச் சுற்றுலாவுக்காக ஐஐஎம் அகமதாபாத்துக்கு வந்துள்ள அவர்கள், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நிர்வாகம் மற்றும் தலைமைப் பண்பு தொடர்பான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து பேசிய ஜார்க்கண்ட் மாநில நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.பி.சிங், தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், பல்வேறு காரணிகளால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை ஒவ்வொன்றாகவே செயல்படுத்த முடிகிறது. இந்த பயிற்சி அவற்றை திறம்பட நிறைவேற்ற உதவும் என்று தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com