நாங்கள் மரியாதையான வாழ்க்கையை வாழ சமூகம் ஏன் விடுவதில்லை? - கதறியழுத திருநங்கை!

நாங்கள் மரியாதையான வாழ்க்கையை வாழ சமூகம் ஏன் விடுவதில்லை? - கதறியழுத திருநங்கை!

நாங்கள் மரியாதையான வாழ்க்கையை வாழ சமூகம் ஏன் விடுவதில்லை? - கதறியழுத திருநங்கை!
Published on

’பிரியாணி கடை வைத்து நேர்மையாக சம்பாதித்துவந்த எங்களை அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் துன்புறுத்துகிறார்கள்’ என்று  திருநங்கை ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த திருநங்கை சஜினா ஷாஜி பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 4 திருநங்கைகள் உட்பட இரண்டு பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். கொரோனா சூழலிலும் இவரது கடையில் கூட்டம் இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது 150 பிரியாணி பாக்கெட்டுகளை கட்டினால் அதில், 20 தான் போகிறது என்றும் அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் தங்களை தவறாக சொல்வதால் கூட்டம் குறைந்துவிட்டது என்றும் பரபரப்பு குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ”எங்கள் கடை எதிரே ஒரு நபர் வேண்டுமென்றே கருவாடுகளை பரப்பி விற்றதோடு, எங்கள் கடை உணவு குறித்து வதந்தியும் பரப்பினார். அதோடு, என்னையும் மற்ற திருநங்கைகளையும் அடித்து துன்புறுத்தினர். ஒழுக்கமான வாழ்க்கை வாழவேண்டும் என்று மக்கள் எங்களிம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், சமூகம் எங்களை மரியாதையுன் செயல்பட அனுமதிக்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது? இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது அறுவை சிகிச்சைக்காக சேமித்த பணத்தைப் போட்டுதான் கடையை ஆரம்பித்தேன்.

ஆனால், இப்போது எனக்கு வியாபாரத்தை தொடர வழியில்லை. ஒரு மரியாதையான வாழ்க்கையை வாழ் நினைக்கிறோம். அதனை கெடுக்கும் விதமாக நடந்துகொள்கிறார்கள். 300 பாக்கெட்டுகள் வரை விற்ற கடையில் இப்போது, 20 தான் விற்கிறது” என்று வேதனையோடு சஜினா ஷாஜி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் சஜனா ஷாஜிக்கு போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். அதனால், தற்போது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com