சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் - காரணங்களை அடுக்கிய அமித்ஷா

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் - காரணங்களை அடுக்கிய அமித்ஷா
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் - காரணங்களை அடுக்கிய அமித்ஷா

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஜம்மு - காஷ்மீர் என்றுமே தீவிரவாதிகளின் மாநிலமாக இருக்க வேண்டுமா? எங்களுக்கு 5 வருடங்கள் கொடுங்கள். ஜம்மு காஷ்மீரை வளர்ந்த மாநிலமாக மாற்றுகிறோம். அதற்கு ஒரே தீர்வு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது தான். பாகிஸ்தான் குழுவினர் இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப முயல்கின்றனர். 

குஜராத், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏன் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் அங்கெல்லாம் சட்டப்பிரிவு 370 இல்லை என்பதே. சட்டப்பிரிவு 370ஐ இன்று நீக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாமல் போகும். எங்களுக்கு மத அரசியலில் நம்பிக்கை இல்லை. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மட்டுமா வசிக்கிறார்கள்? இந்து, சீக்கியர்கள், புத்த மதத்தினர் என பலரும் வசிக்கிறார்கள். சட்டப்பிரிவு 370 நல்லது என்றால் அது எல்லாருக்குமானது. கெட்டது என்றாலும் அது அனைவருக்குமானது என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com