இந்தியா
விமானத்தில் பயணிக்க சிறார்களுக்கு அடையாள அட்டை அவசியமில்லை
விமானத்தில் பயணிக்க சிறார்களுக்கு அடையாள அட்டை அவசியமில்லை
விமான நிலையத்திற்கு பெற்றோருடன் வரும் சிறார்கள் தனியாக அடையாள அட்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஆதார், பான், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 10 ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய மொபைல் ஆதார் போதும் என மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. விமான நிலையங்களில் நுழைவதற்கு மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் எண் இருந்தால் அதனைக் காட்டலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த அடையாள அட்டையும் காட்டத்தேவையில்லை என்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.