ஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி கொரோனா 3 வது அலை தாமதமாக வரக்கூடும் : அரசின் நிபுணர் குழுத் தலைவர்

ஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி கொரோனா 3 வது அலை தாமதமாக வரக்கூடும் : அரசின் நிபுணர் குழுத் தலைவர்

ஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி கொரோனா 3 வது அலை தாமதமாக வரக்கூடும் : அரசின் நிபுணர் குழுத் தலைவர்
Published on

.சி.எம்.ஆர் ஆய்வின்படி கொரோனா 3 வது அலை தாமதமாக வரக்கூடும் என மத்திய அரசின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார்

இது தொடர்பாக பேசிய அவர், "ஐசிஎம்ஆர் ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறது, இதன்படி கொரோனா 3-வது அலை தாமதமாக வரக்கூடும் என்று கூறுகிறது. எனவே நாட்டில் உள்ள அனைவருக்கும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க 6-8 மாதங்கள் வரை காலஅவகாசம் உள்ளது. இனி வரும் நாட்களில், ஒவ்வொரு நாளும் 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்குவதே எங்கள் இலக்கு" என்று கூறினார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து பேசிய டாக்டர் என்.கே. அரோரா, “ஜைடஸ் காடிலா தடுப்பூசிக்கான சோதனை கிட்டத்தட்ட முடிந்தது. ஜூலை இறுதிக்குள் அல்லது ஆகஸ்டில், இந்த தடுப்பூசியை 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க ஆரம்பிக்கலாம்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com