“பயங்கரவாதத்தை எதிர்ப்பது நாடுகளின் பிரச்னை” பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

“பயங்கரவாதத்தை எதிர்ப்பது நாடுகளின் பிரச்னை” பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

“பயங்கரவாதத்தை எதிர்ப்பது நாடுகளின் பிரச்னை” பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி
Published on

பயங்கரவாதம் தொடர்பான பிரச்னையை கையாள்வது நாடுகளுக்கு இடையிலானது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ராகுல் ஜோரி கொண்டு வந்தார். இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தரப்பில் அதன் பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொண்டார்.

இதனிடையே, பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாட்டை, கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசிஐ நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “பயங்கராவதத்தை சுட்டிக்காட்டி ஒரு போட்டியை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது அரசாங்கங்கள் இடையிலான பிரச்னை. ஐசிசி-க்கு அதில் எவ்வித பங்கும் இல்லை” என்று நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசவே ஐசிசி மறுத்துவிட்டது.

பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஐசிசி தெரிவிப்பது எங்களுக்கும் தெரியும். இருப்பினும் நாங்கள் ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறோம்” என்றார். முன்னதாக ஐசிசிக்கு பாகிஸ்தான் எழுதியிருந்த கடிதத்தில் பாகிஸ்தானை சுட்டிக்காட்டாமல், பயங்கரவாதத்திற்கு துணை போகும் நாடுகளுக்கு எதிராக விளையாடக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தது. 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்திய அணி விளையாடக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com