\
3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி..!

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி..!

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி..!
Published on

உத்தர பிரதேசத்தில் பெண் அதிகாரி ஒருவர் 3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரி சவும்யா பாண்டே என்பவர் சமீபத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த சவும்யா பாண்டே பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் பிரசவகால விடுப்பு எடுக்காத பெண் அதிகாரி சவும்யா பாண்டே தன்னுடைய 3 வாரகால கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார்.

அவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கையில் குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கிறது. பெண் அதிகாரிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் சரியான ஓய்வுக்கு பிறகு பெண் அதிகாரி பணிக்கு வர வேண்டும் எனவும் சிலர் அன்பாக தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com