காந்தியை விமர்சித்ததாக சர்ச்சை : ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்

காந்தியை விமர்சித்ததாக சர்ச்சை : ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்
காந்தியை விமர்சித்ததாக சர்ச்சை : ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்

மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை, மகாராஷ்ட்ரா அரசு அதிரடியாக மாற்றியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுதாரி, மும்பை மாநகராட்சியில், துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாத்மா காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்குவோம். உலகம் முழுவதும் உள்ள காந்தி சிலைகளை அகற்றுவோம். அவர் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை அனைத்துக்கும் வேறு பெயர் வைப்போம். மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்க முடியும். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி” என தெரிவித்திருந் தார். இது சர்ச்சையானது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நிதி சவுதாரியை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தின. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தான் செய்த ட்வீட் திரித்து கூறப்பட்டுள்ளது எனவும், காந்தியை மரியாதை குறைவாக பேசியதில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார். கோட்சே ஆதரவாளர்களை கிண்டல் செய்யும் வகையிலே அந்த கருத்தை பதிவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, நிதி சவுத்ரியை மகாராஷ்ட்ரா அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. அவர் மந்திராலயாவில் குடிநீர் விநியோக துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காந்தியை விமர்சித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com