ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி ஒதுக்கீடு : புதிய முறையை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி ஒதுக்கீடு : புதிய முறையை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி ஒதுக்கீடு : புதிய முறையை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது கடைபிடிக்கப்படும் பணி ஒதுக்கீடு முறையை மாற்றி , முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை முசோரிக்கு அனுப்பி அங்கு தரப்படும் பயிற்சி அடிப்படையில் மதிப்பெண் வழங்கி பணி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் அந்த சுற்றறிக்கைக்கு தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பலரின் சிவில் சர்வீஸ் கனவு கலையும் என்றும் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்து தேர்வுக்கான மதிப்பு குறையும் என்பதும் முதன்மையான குற்றச்சாட்டுகளாக இருந்தது. அதோடு தென்மாநில மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேறாமல் போய்விடும் என்பதும் பலரின் குற்றச்சாட்டாக இருந்தது. 

பல சிக்கல் உள்ளதாக, தேவையற்றதாக கருதப்பட்ட இந்த சுற்றறிக்கை குறித்து பேசிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் ”ஆண்டுதோறும் அடிப்படை பயிற்சியின் துவக்கத்திற்கு முன்பே, சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டோ சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிப் பணி அதிகாரிகளுக்கு, அடிப்படை பயிற்சிக்கு பின்பே பணி ஒதுக்கீடு செய்யப்பட உல்ளது. பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாமா? என்பதை ஆராய்தல் ; அடிப்படை பயிற்சியில், பயிற்சிப்பணி அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முறையான முக்கியத்துவத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல் ; சிவில் சர்விஸ் தேர்வு மற்றும் அடிப்படை பயிற்சி ஆகியவற்றில் பெறும் கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்திந்திய குடிமைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்வதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல் போன்றவற்றை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது என்றார்.

இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணி ஒதுக்கீடு முறையில் பின்பற்ற உள்ளதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய மத்திய பிரதம அமைச்சக அதிகாரி ஒருவர், பணி ஒதுக்கீடு முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக பரிந்துரை பெற முடிவெடுக்கப்பட்டே அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதுவெ இறுதி என புரிந்து கொள்ளப்பட்டதால் அதனை திரும்ப பெற உள்ளோம் என்றார். மேலும் வெளியான சுற்றறிக்கை எந்த வித தயாரிப்போ, உரிய விளைவுகளை ஆராய்ந்தோ கொடுக்கப்பட்டதில்லை. அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசினை பொருத்தவரை அதனை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது , விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com