“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா

“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா
“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா

இந்திய-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்திய விமானப்படை விழிப்புடன் உள்ளதாக தளபதி பிஎஸ் தனோவா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலிடமும் முறையிட்டது. ஆனால் ஐநாவில் பாக். கொண்டுவந்த காஷ்மீர் விவகாரம் தோல்வியை தழுவியது. மேலும் லடாக் பகுதிக்கு அருகிலுள்ள விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தனது போர் விமானங்களை நிறுத்தியது. 

இந்நிலையில் இந்திய விமானப்படை விழிப்புடன் உள்ளதாக விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாடுகளை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் உள்ளோம். விமானப்படையின் விமானம் மட்டுமில்லாமல் சாதாரண விமானங்களையும் நாங்கள் கவனித்து வருகிறோம். எல்லா நாடுகளும் தங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே எடுத்துள்ளன. ஆகவே இது பற்றி பெரிதும் கவலைப்பட தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் அமெரிக்க தூதர் அசாத் மஜித் கான், “நாங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து காஷ்மீர் பகுதிவரை ராணுவப்படைகளை குவிப்போம்” என்று கடந்த 12ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com