‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு

‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு

‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு
Published on

எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள நிலையில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இந்திய விமானப்படையின் ‘மிராஜ்2000’ ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ராணுவ விமானங்கள் அத்துமீறியது உண்மைதான் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பயங்கராவதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து குஜராத் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் அருகே, இந்த ஆளில்லா விமானம் நுழைந்ததுள்ளது. இந்திய எல்லையில் பாதுகாப்பை உளவு பார்ப்பதற்காக இது அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அதை சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர், “நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன். நாட்டுமக்கள் பாதுகாப்பாக இருக்க காரணம் நமது பாதுகாப்பு படையினரே. நான் எதற்காகவும் யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது. நாட்டிற்கு எதிரான எந்தச் செயல்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்” எனப் பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com