காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் உடன்பாடில்லை: முலாயம் சிங்

காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் உடன்பாடில்லை: முலாயம் சிங்
காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் உடன்பாடில்லை: முலாயம் சிங்

காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி வைத்ததில் தனக்கு உடன்பாடில்லை என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியில் தந்தை-மகன் வலுத்து வருகிறது. கட்சியின் சின்னத்துக்காக முலாயம், அகிலேஷ் என இருவருமே தேர்தல் ஆணையத்திடம் தனித்தனியாக முறையிட்டனர். இதில், கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்ததுடன், ராகுலுடன் இணைந்து லக்னோவில் பேரணியும் நடத்தி விட்டார்.

இந்தநிலையில், காங்கிரஸ்-சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ள முலாயம் சிங் யாதவ், இதில் தமக்கு உடன்பாடில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் திறன் இருப்பதாகக் கூறிய முலாயம், வரும் தேர்தல் காங்கிரஸ்-சமாஜ்வாதிக் கூட்டணிக்காக பிரசாரம் செய்யப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com