\
மீண்டும்  முழுநேர அரசியலுக்கு திரும்புவேன் -லாலு பிரசாத் யாதவ்

மீண்டும்  முழுநேர அரசியலுக்கு திரும்புவேன் -லாலு பிரசாத் யாதவ்

மீண்டும்  முழுநேர அரசியலுக்கு திரும்புவேன் -லாலு பிரசாத் யாதவ்
Published on

தாம் மீண்டும் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி தொண்டர்களுக்கு காணொலி வாயிலாக பேசிய லாலு பிரசாத் யாதவ், தனது மருத்துவர்கள் அனுமதி அளித்தவுடன் தாம் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு திரும்ப இருப்பதாக குறிப்பிட்டார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்த லாலு பிரசாத் யாதவ், மதவாத சக்திகளின் முன் மண்டியிடுவதற்கு முன் உயிரை விடுவது மேல் எனக் கூறினார்.

நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், வேலையின்மை அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com