\
புதுச்சேரியில் எனது ஆளுமைக்கு உட்பட்ட துறைகளில் கவனம் செலுத்துவேன்: தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் எனது ஆளுமைக்கு உட்பட்ட துறைகளில் கவனம் செலுத்துவேன்: தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் எனது ஆளுமைக்கு உட்பட்ட துறைகளில் கவனம் செலுத்துவேன்: தமிழிசை செளந்தரராஜன்
Published on

புதுச்சேரியில் தனது ஆளுமைக்கு உட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நேற்று காலை பொறுப்பேற்றார் தமிழிசை செளந்தரராஜன். பொறுப்பேற்ற நாளே அவர் கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடியில் ஊட்டச்சத்து உணவு குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியர்களை சந்தித்த அவர் குழந்தைகள் மீது பற்று உள்ளதால் அங்கன்வாடியில் எத்தகைய  ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது என ஆய்வு செய்தேன். அரிசி, கேழ்வரகு வாரத்தில் ஒரு முட்டை குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஊட்டச்சத்து உணவை மேம்படுத்த ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி அல்லது பணமாக வழங்கலாமா என்பது குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்களுக்கு எது நல்லதோ அதை செயல்படுத்துவேன் என்று கூறினார். மேலும் தனது ஆளுமைக்கு உட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com