”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி

”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி

”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி
Published on

விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் கொல்லப்பட்டதற்கு நானும் பிரியங்காவும் மகிழ்ச்சியடையவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு மாணவர்களிடம் தீவிரவாதம் குறி்த்து பேசினார். அப்போது " வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டது எங்களது குடும்பமாகத்தான் இருக்கும். என்னுடைய பாட்டி இந்திரா காந்தியும், என் தந்தை ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்கள். எனவே வன்முறையின் வலி எனக்கு நன்றாக தெரியும்" என ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி " என் தந்தை 1991 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். 2009 ஆம் ஆண்டு என் தந்தை கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர் இலங்கையின் நிலத்தில் உயிரிழந்துகிடந்தார். இதனை நான் டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். பிரபாகரன் கொல்லப்பட்டதும் நான் அவர் உடலைப் பார்த்தேன். ஏன் இவ்வாறு நடந்தது என்று நினைத்தேன். இந்த சம்பவம் மிகுந்த கவலையைக் கொடுத்ததுடன், குற்ற உணர்வை அளித்தது."

உடனடியாக என் தங்கை பிரியங்காவை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன்.என் உணர்வுகளை பிரியங்காவிடம் தெரிவித்தேன். ஆச்சரியமாக பிரியங்காவும் பிரபாகரன் உடலை பார்த்து என்னிடம் கவலை தெரிவித்தார். நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை" என கூறியுள்ளார்.

வன்முறை குறித்து பல்வேறு விஷயங்களை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்ட ராகுல் காந்தி "வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை திடமாக நம்புகிறேன். பிரபாகரன் இறந்தபோது அவரின் பிள்ளைகள் இடத்தில் இருந்து என்னை பார்த்தேன். அதுதான் எனக்கு பெரும் வலி தந்தது, ஏனென்றால் அந்த வயதில் நானும் வலியை உணர்ந்துள்ளேன். பிரபாகரன் கெட்டவராகவும் இருக்கலாம் தீய சக்தியாகவும் இருக்கலாம், ஆனால் அவரின் கொலை என்னை பாதித்தது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com