இந்தியா
“என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிதான்” - ப.சிதம்பரம்
“என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிதான்” - ப.சிதம்பரம்
நாட்டின் பொருளாதாரத்தை பற்றிய கவலையே தமக்கு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, நீதிமன்ற காவலுக்கு செல்வது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிதம்பரம், “நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன்” என தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “5 சதவீதம். நான் சொல்கிற 5 சதவீதம் எது என்பது தெரிகிறதா?” என்று கூறியிருந்தார். இந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளதை குறிப்பிட்டு அதனை அவர் தெரிவித்தார்.

