"தலைமுடியை இழுத்து தாக்கினார்"- பீகார் முன்னாள் முதல்வர் மீது மருமகள் புகார்

"தலைமுடியை இழுத்து தாக்கினார்"- பீகார் முன்னாள் முதல்வர் மீது மருமகள் புகார்

"தலைமுடியை இழுத்து தாக்கினார்"- பீகார் முன்னாள் முதல்வர் மீது மருமகள் புகார்
Published on

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய், தனது மாமியாரும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தன்னை புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துவதாக கூறி ஐஸ்வர்யா ராய் விவாகரத்து கேட்டிருந்தார். இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு முன் தன்னை அடித்து, தலைமுடியால் இழுத்து ராப்ரிதேவி தாக்கியதாக ஐஸ்வர்யா ராய் புகார் அளித்துள்ளார். 

மேலும், தனது குடும்பத்தினர் குறித்து அவதூறான சுவரொட்டிகளை பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கணவர் தேஜ் பிரதாப் யாதவின் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்ததாகவும் அது குறித்து தட்டிக் கேட்டதற்கு மாமியார் ராப்ரி தேவி தன்னை கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ராப்ரி தேவியின் பெண் பாதுகாவலரும் சேர்ந்து தன்னை தாக்கினார் என்றும் அவர்களின் செயலை வீடியோ பதிவிட்டபோது தனது செல்போனை பறித்ததாக மிக உருக்கத்துடன் ஐஸ்வர்யா ராய் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com