எனக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்; ரூ.2.75 லட்சம் வரி செலுத்துகிறேன்: ராம்நாத் கோவிந்த்

எனக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்; ரூ.2.75 லட்சம் வரி செலுத்துகிறேன்: ராம்நாத் கோவிந்த்

எனக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்; ரூ.2.75 லட்சம் வரி செலுத்துகிறேன்: ராம்நாத் கோவிந்த்
Published on

எனக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம், அதில் ரூ.2.75 லட்சத்தை வரியாக செலுத்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பராங்கு கிராமத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "எனக்கு மாதத்திற்கு ரூபாய் 5 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. அதில் ரூ.2.75 லட்சம் வரியாக செலுத்துகிறேன். இந்தியாவில் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இது உதவும் " என்றார்

மேலும், "குடியரசுத் தலைவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதிகாரிகள், ஆசிரியர்கள் நான் சேமிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.” என்று அவர் கூறினார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com