"கோட்டும் ஒயிட் நோட்டும் ஒயிட்"- தமிழிசை..!

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பால் எனக்கு கவலையில்லை. 'கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்' என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்PT desk

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகிய கலந்து கொண்டனர். அப்போது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது...

ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய்
ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய்file image

தொழில் முனைவோரில் 16 சதவீதம் பெண்கள் தான் உள்ளார்கள். கல்வி சுதந்திரத்தை பெற்று விட்டோம், பொருளாதார சுதந்திரத்தை பெறவேண்டும் என்றால் பெண்கள் தொழில்முனைவோராக வரவேண்டும்.இந்த தளத்தில் நிற்பதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தவிடுபொடியாக்கக் கூடிய தன்னம்பிக்கை இருந்தது .அந்த தன்னம்பிக்கையால் மட்டுமே நான் இருந்து கொண்டிருக்கின்றேன்.

அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான ஒரு துறை கிடையாது, பெண்கள் அதில் முன்னே வந்து, முன்னேற வேண்டும் என்றால் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், பாதை ஒன்றும் மலர்பாதை அல்ல, முட்களாலும், கற்களாலும் கால்களை குத்திக் கிழிக்கும் பாதை தான், இந்த பாதை. அதிலும் வேகமாக நடைபோட்டால் முன்னுக்கு வர முடியும், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என நினைக்காதீர்கள், எப்படி மாணவிகள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று சொல்கின்றேனோ அதேபோல் பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடம் வைக்கின்றேன், அதிகமாக படித்த பெண்கள் வரவர அரசியல் தூய்மையாகும் என்று பேசினார்.

2,000 ரூபாய், ரிசர்வ் வங்கி
2,000 ரூபாய், ரிசர்வ் வங்கிtwitter page

ஆளுநருக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடு வருமா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எதிர்பார்த்து வருகின்றார். புதுச்சேரியில் ரங்கசாமிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வராது. டில்லிக்கு வழங்கிய தீர்ப்பை பொறுத்தவரை டில்லி தலைநகர் என்பதால் அதற்காக தனியாக அரசியலைமைப்புச் சட்டத்தை சார்ந்த துணை நிலை மாநிலம் டில்லி, புதுச்சேரி மற்ற துணை நிலை மாநிலங்கள். அதனால் அந்தந்த மாநிலத்திற்கென்று கடமைகளில் வரையறை உள்ளது. டில்லியில் முதலமைச்சரிடமிருந்து கோப்புகள் போவதில்லை ஆனால், புதுச்சேரியில் அப்படி கிடையாது. முதலமைச்சரிடமிருந்து வரும் கோப்புகளைத்தான் நான் ஒப்புதல் அளித்து அனுப்புகின்றேன். ரங்கசாமி அனைத்து கோப்புகளிலும் ஒப்புதல் பெறுகின்றார் என்பது தான் நாராயணசாமிக்கு கவலையாக உள்ளது.

தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் என்ற அறிவிப்பு குறித்து கேட்டதற்கு. எனக்கு அதுபற்றிய தகவல் தெரியவில்லை. ஆனால், எனக்கு கவலையில்லை கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட், ஆனால், அதை வைத்திருப்பவர்கள் நேர்மையாக செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com