பெண்களை அனுமதிக்காத கடவுள் எனது கடவுள் இல்லை: பிரகாஷ் ராஜ் பேச்சு

பெண்களை அனுமதிக்காத கடவுள் எனது கடவுள் இல்லை: பிரகாஷ் ராஜ் பேச்சு

பெண்களை அனுமதிக்காத கடவுள் எனது கடவுள் இல்லை: பிரகாஷ் ராஜ் பேச்சு
Published on

’வழிபடுவதற்கு பெண்களை அனுமதிக்காத கடவுள் எனது கடவுள் அல்ல’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கூறினார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னடத்தில், ’இருவுதெல்லவ பிட்டு’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம்  வெளியிடப்பட்டது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ள இந்தப் புத்தகம், மலையாளத்தில் ’நம்ம விழுங்கு ன்ன மவுனம்’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 

இந்தப் புத்தகம் சார்ஜாவில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அப்போது அங்கு வாசகர்களின் கேள் விக்கு பதிலளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிரகாஷ் ராஜ். 

அப்போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதுபற்றி அவர் பேசும்போது, ’ நாம் எல்லோரும் பெண்க ளின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம். அவள், கடவுளை வழிபட வேண்டும் என்று விரும்பினால், அனுமதிக்க வேண்டும். என் அன்னையை எந்த மதம் வழிபட அனுமதி மறுக்கிறதோ, அது என் மதம் அல்ல. எந்த பக்தர்கள் என் அன்னை யை வழிபட அனுமதி மறுக்கிறார்களோ, அவர்க ள் உண்மையான பக்தர்கள் அல்ல.

எந்த கடவுள், அவளை மறுக்கிறதோ, அது உண்மையான கடவுளும் இல்லை. அவளுக்கான வழிபாட்டு உரிமையை அந்த கடவுள் மறுத்தால், அது எனது கடவுளும் இல்லை. பெண்களை பார்க்க விரும் பாத கடவுளை நானும் பார்க்க விரும்பவில்லை’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com