இந்தியா
சீன உணவுகளை புறக்கணிக்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்
சீன உணவுகளை புறக்கணிக்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்
சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் சீனாவை சேர்ந்த வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சீன உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.