\
"2024 தேர்தலிலும் நானே பாஜக பிரதமர் வேட்பாளர்" - மோடி சூசகம்

"2024 தேர்தலிலும் நானே பாஜக பிரதமர் வேட்பாளர்" - மோடி சூசகம்

"2024 தேர்தலிலும் நானே பாஜக பிரதமர் வேட்பாளர்" - மோடி சூசகம்
Published on: 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பருச் பகுதி மக்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உடையாற்றினார். தம்மை சந்தித்த எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், இரண்டு முறை பிரதமராக இருந்தாலே போதும் என்றும் வேறு என்ன வேண்டும் என குறிப்பிட்டதாக கூறினார்.



ஆனால் மோடி முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியவில்லை என பிரதமர் மோடி கூறினார். குஜராத் தம்மை வடிவமைத்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, அதனால்தான் நடந்தது நடந்துவிட்டது, இனி ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை என்றும் நலத்திட்டங்கள் 100 விழுக்காடு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே தமது கனவு எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

முன்பைவிட மேலும் உத்வேகத்துடன் பணியாற்றப்போவதாக அந்த எதிர்க்கட்சி தலைவரிடம் தான் கூறியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.



logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com