டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த மக்களவை துணை சபாநாயகர், நான் என அமெரிக்க எம்.பி.யா? என கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் 15-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இன்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசவில்லையே என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தம்பிதுரை, கடந்த வாரமே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நான் சந்தித்து பேசினேன். தற்போது முதலமைச்சர் உத்தரவின் பேரில் நானும், அமைச்சர் துரைக்கண்ணும் இங்கு வந்துள்ளோம். நான் என்ன அமெரிக்க எம்.பி.யா.? நானும் தமிழக எம்.பி. தான் என்றார். நானும் அமைச்சர் என்ற கேடர் பொறுப்பில் வருபவன்தான் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நானே வலியுறுத்தி உள்ளேன் எனவும் கூறினார்.