“தீர்ப்பை ஏற்கிறேன்; ஆனால் நீதிமன்றத்தை நாடுவேன்” நந்திகிராம் தோல்வி குறித்து மம்தா!

“தீர்ப்பை ஏற்கிறேன்; ஆனால் நீதிமன்றத்தை நாடுவேன்” நந்திகிராம் தோல்வி குறித்து மம்தா!
“தீர்ப்பை ஏற்கிறேன்; ஆனால் நீதிமன்றத்தை நாடுவேன்” நந்திகிராம் தோல்வி குறித்து மம்தா!

நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 216 இடங்களிலும் பாஜக 75 இடங்களிலும் மற்றவை ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர். இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடட்டும் என சுவேந்து அதிகாரி சவால் விடுத்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்து நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார் மம்தா.

இந்நிலையில்தான், மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிலநிமிடங்களில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாகவும் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி “தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் நீதிமன்றத்தை நாடுவேன். ஏனென்றால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சில சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றை நான் வெளிப்படுத்துவேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com