\
ஆண் நண்பருடன் வீடியோ காலிங் செய்துகொண்டே தற்கொலை செய்த மாணவி

ஆண் நண்பருடன் வீடியோ காலிங் செய்துகொண்டே தற்கொலை செய்த மாணவி

ஆண் நண்பருடன் வீடியோ காலிங் செய்துகொண்டே தற்கொலை செய்த மாணவி
Published on: 

ஆண் நண்பருடன் வீடியோ காலிங் செய்துகொண்டே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கோம்பலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்துவந்த மாணவி ஹசீனா சவுத்ரி. இவர் தனது ஆண் நண்பருடன் வீடியோ சாட்டிங் செய்து கொண்டிருந்தபோதே தனது விடுதியில் உள்ள அறையில் உள்ள தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹசீனா தூக்கு போடுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும்போதே வீடியோ மூலம் அதனை அறிந்த அவரது ஆண் நண்பர் அதுகுறித்து ஹசீனாவின் தோழிக்கு தகவல் தெரிவித்து அவரை காப்பாற்றுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் சென்று கதவை திறப்பதற்குள் ஹசீனா உயிரிழந்துவிட்டார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஹசீனாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com