தேர்வு எழுதச்சென்ற தாய் : குழந்தைக்கு பாலூட்டிய காவலர்கள்

தேர்வு எழுதச்சென்ற தாய் : குழந்தைக்கு பாலூட்டிய காவலர்கள்

தேர்வு எழுதச்சென்ற தாய் : குழந்தைக்கு பாலூட்டிய காவலர்கள்
Published on

ஹைதராபாத்தில் தாய் அரசுத் தேர்வு எழுதச்சென்ற நேரத்தில், அங்கிருந்த கைக்குழந்தையை காவலர்கள் கவனிக்கொண்டனர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற குரூப் 4 அரசுத்தேர்வை பெண் (தாய்) ஒருவர் எழுதச்சென்றார். அப்போது அவரது கைக்குழந்தையை விட்டு அவர் தேர்வு எழுதும் சூழ்நிலை ஏற்பட்டது. தாய் தேர்வு எழுதும் நேரத்தில் குழந்தையை பசியால் அழுதுள்ளது. அப்போது அங்கு பணியிலிருந்த மஹான்காளி காவல்நிலைய காவலர் திவாகர் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டார். பின்னர் அவர் மற்றும் அவருடன் பணியில் இருந்த சக காவலர்கள் இணைந்து குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டினர். மேலும் குழந்தை அழுகாமல் இருக்க அவர் வேடிக்கையும் காட்டினர். 

இதேபோன்ரு சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானாவில், தாய் ஒருவர் காவலர் தேர்வு எழுத சென்றபோது குழந்தைகள் மையத்தில், தனது 4 மாத குழந்தையை விட்டுச்சென்றார். அப்போது குழந்தையை அழுகையை நிறுத்தாததால், அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் ரஹ்மான் பாட்டுப்பாடி அழுகையை நிறுத்தினார். இந்த சம்பவத்தைப் போன்றே தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com