ஆண் குழந்தையை 45000 ரூபாய்க்கு விற்ற தாய்.. இப்படியொரு அற்ப காரணமா!!
ஹைதராபாத் - ஹபீப் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் சோயா கான். 22 வயது பெண்ணான அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய தகராறினால் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சோயா கான் ஆண் குழந்தையை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெற்றுள்ளார். வருமானம் இல்லாமல் குழந்தையை வளர்க்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு எப்படியாவது வாழ்க்கையில் ஒருமுறையாவது மும்பை சென்றுவிட வேண்டுமென்ற ஆர்வமும் இருந்துள்ளது.
அதனால் தனது குழந்தையை விற்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் அவர். இறுதியில் குழந்தையை 45000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இதனை அறிந்த சோயான் கானின் கணவர் அப்துல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் குழந்தை விற்ற விவகாரத்தில் சோயா கானை கைது செய்துள்ளனர். அதோடு குழந்தையையும் 24 மணி நேரத்திற்குள் மீட்டு சோயா கானின் கணவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை வாங்கிய குடும்பத்தினர் உட்பட சுமார் 5 பேரை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்துள்ளனர்.