லாரி ஓட்டுநர்கள் போராட்டம்: மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்.. குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர்!

ஹைதராபாத்தில் குதிரையில் சென்று ஒருவர் உணவு விநியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹைதராபாத்
ஹைதராபாத்ட்விட்டர்

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள புதிய தண்டனை சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா) சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தெரிவிக்காமல் தப்பியோடும் கனரக வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான ஷரத்துகளை திரும்பப் பெறக் கோரி ஜம்மு- காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் லாரி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு

பின்னர், இந்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அதேநேரத்தில், இந்தப் போராட்டம் காரணமாக, அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம், பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வட இந்தியாவில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர், குதிரையில் சென்று உணவை விநியோகிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

அவருக்கு நெட்டிசன்கள் சிலர் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த இடத்தில் போராட்டக்காரர்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், அதை வலியுறுத்தவே டெலிவரி பார்ட்னர் இப்படி நூதனமாக நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com