அண்ணன் வீட்டில் கும்பலுடன் கொள்ளையடித் தம்பி
கைது செய்யப்பட்டவர்கள்கூகுள்

ஹைதராபாத் | சொந்த அண்ணனின் வீட்டில் கும்பலாக சென்று கொள்ளையடித்த சகோதரர் கைது

பொறாமையின் உச்சத்தின் விளைவாக தனது சொந்த அண்ணன் வீட்டிலேயே கொள்ளையடித்த சம்பவம் ஒன்று ஹைத்தராபாத்தில் நடந்துள்ளது.
Published on

ஹைதராபாத்தில் தனது சொந்த அண்ணன் வீட்டிலேயே கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளை
கொள்ளை

ஐதராபாத்தில் உள்ள தோமல்குடாப்பகுதியைச் சேர்ந்தவர் இந்திரஜித் கோசாய். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். மேலும், இவர் அதிகப்படியான ஆடம்பரத்தை விரும்புவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்திரஜித் தனது ஆடம்பரத்தினால் ஊதாரித்தனமாகச் செலவு செய்து, தனது தொழிலில் நட்டமடைந்து இருக்கிறார்.

அதே சமயம் இவரது மூத்த சகோதரன், தொழிலில் இலாபத்தைப்பார்த்து நல்ல வசதியுடன் இருந்து வந்துள்ளார். இது இந்திரஜித்திற்கு பிடிக்கவில்லை. இதனால் சகோதரனிடம் பொறாமைக்கொண்டு விரோதத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் சகோதரனிடம் கொண்ட பொறாமையால், அவர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவ தினத்தன்று, இந்திரஜித் 11 பேர் கொண்ட கும்பலுடன் கையில் கோடாரி, கத்தி, அரிவாள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதத்துடன், தனது சகோதரனின் வீட்டிற்குள் நுழைந்து, அங்குள்ளவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்ததுடன் ரூ.2.9 லட்ச ரூபாயையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து இந்திரஜித் சகோதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து விராசணையை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் முடிவில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர். மேலும், இந்திரஜித்திற்கு எதிராக வழக்கை பதிவு செய்த போலிசார், மத்திய மண்டல அதிரடிப்படை குழுவுடன் இணைந்து, முக்கிய குற்றவாளியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திரஜித் கோராய் உட்பட 12 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் கைப்பற்றி, அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 1.20 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பித்தளை பொருட்கள், பணம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com