ஹைதராபாத்: நிறுவனத்தின் கேண்டீனில் விநியோகித்த உணவில் செத்த பாம்பு! அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் செயல்படும் கேண்டீனில் மதிய உணவின்போது செத்த பாம்பு விநியோகிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ECIL
ECIL twitter
Published on

ஹைதராபாத்தில் ECIL என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM) பிரிவில் கேண்டீன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த கேண்டீனில், தினந்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த கேண்டீனில் கடந்த 21ஆம் தேதி, மதிய உணவு பரிமாறப்பட்டு உள்ளது. அப்போது ஓர் ஊழியருக்குப் பரிமாறப்பட்ட உணவில் சிறிய செத்த பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அவர், தனது ஊழியர்களுடன் சேர்ந்து முறையிட்டுள்ளார்.

இதற்கு எதிராகவும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் இவ்வுணவை உட்கொண்ட ஊழியர்கள் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த படம் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மேலும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com