ஹைதராபாத் : போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்; பெண் மீது கோடாரியால் தாக்குதல்

ஹைதராபாத் : போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்; பெண் மீது கோடாரியால் தாக்குதல்

ஹைதராபாத் : போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்; பெண் மீது கோடாரியால் தாக்குதல்

ஹைதராபாத் நகரின் மீர்பேட் சரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணை கோடாரியால் தாக்கி கொல்ல முயன்றுள்ளார் ஆண் ஒருவர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளான பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விவசாரணையில் போலீசில் வேறொரு வழக்கு தொடர்பாக புகார் கொடுத்தமைக்காக அந்த பெண் கோடாரியால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை செய்தவர் ராகுல் கவுட் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தாக்குதலுக்கு ஆளானவர் விமலா என்ற பெண் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

“இந்த சம்பவம் திங்களன்று காலை நடந்துள்ளது. அன்று காலை 6.30 மணி அளவில் விமலா வீட்டின் வாசலில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அங்கு வந்த ராகுல், விமலாவை கோடாரியால் தாக்கியுள்ளார். அந்த தாக்குதலின்போது குழந்தையை பத்திரப்படுத்திய விமலா, தாக்குதலில் இருந்து தப்பிக்க கைகளை வைத்து தடுத்துள்ளார். தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்து விமலா உயிர் பிழைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே ராகுல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். விமலா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுய நினைவுடன் உள்ளார். 

ராகுல் மீது கொலை முயற்சி மற்றும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளன. ராகுல் விமலாவை தாக்க பழைய பகையே காரணம் என தெரிகிறது. நீண்டநாள் குடும்ப நண்பரான ராகுல் விமலாவுக்கு தொல்லை கொடுத்ததால் போலீசில் வழக்கு கொடுத்துள்ளார். அதற்காக அவர் சிறைக்கும் சென்றுள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com