மீண்டும் வருகிறது ஹைதராபாத்தின் அடையாளமான இரட்டை-டெக்கர் பேருந்துகள்

மீண்டும் வருகிறது ஹைதராபாத்தின் அடையாளமான இரட்டை-டெக்கர் பேருந்துகள்
மீண்டும் வருகிறது ஹைதராபாத்தின் அடையாளமான இரட்டை-டெக்கர் பேருந்துகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத்தில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் சாலைகளில் மக்களின் ஆச்சர்யத்தையும், குறிப்பாக இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டியது இரட்டை அடுக்கு பேருந்துகள். இப்பேருந்தின் மேல்தளத்தில் ஏறி சவாரி செய்ததை பலரும் மகிழ்ச்சியாக நினைவுக்கூர்ந்து வருகிறார்கள். சுமார் இருபது ஆண்களுக்கு முன்புவரை இந்த வரலாற்று நகரத்தின் சாலைகளில் இப்பேருந்துகள் இயங்கின. இப்போது இந்நகரில் மீண்டும் இரட்டை-டெக்கர் பேருந்துகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

சைக்கிள்-ரிக்ஷாக்கள், டபுள் டெக்கர் பேருந்துகள் போன்ற பாரம்பரிய போக்குவரத்து முறைகளை படிப்படியாகக் கொண்டுவருவது நிச்சயமாக மக்களிடம் வரவேற்பை பெறும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் லண்டன் உட்பட உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும்  நிலையில், வரும் மாதங்களில் ஹைதராபாத் நகர சாலைகளில் அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவது 430 ஆண்டுகள் பழமையான நகரின் சுற்றுலாப் பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவமிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து 25  இரட்டை-டெக்கர் பேருந்துகளை வாங்குவதற்காக தெலங்கானா ஆர்டிசி டெண்டர்கள் வழங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com