\
காதலுக்கு எதிர்ப்பு: மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாயும் தீயில் சிக்கி உயிரிழப்பு!

காதலுக்கு எதிர்ப்பு: மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாயும் தீயில் சிக்கி உயிரிழப்பு!

காதலுக்கு எதிர்ப்பு: மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாயும் தீயில் சிக்கி உயிரிழப்பு!
Published on

தெலங்கானா மாநிலத்தின் ஷாத்நகர் பகுதியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை எரித்த தாயும் தீயில் சிக்கி உயிரிழந்தார்

தெலங்கானா மாநிலத்தின் ஷாத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் கணவர், மகளுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரின் மகள் ஷ்ராவந்தி அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம், சந்திரலேகா மற்றும் அவரது கணவருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஷ்ராவந்தியின் காதலுக்கு பெற்றோர் இருவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடிக்கடி இதனால் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் காதல் விவகாரத்தால் வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்குவந்த ஷ்ராவந்தியின் தந்தை மண்ணெண்ணெய் பாட்டிலை மகளின் கையில் கொடுத்து தீயிட்டு கொளுத்திக்கொள் இல்லையென்றால் காதலை மறந்துவிடு என கோபமாக பேசியுள்ளார். அப்போது கடுமையான கோபத்தின் இருந்த சந்திரலேகா, மகளின் கையில் இருந்த மண்ணெண்ணெய்யை பிடிங்கி மகள் மீதே ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது சந்திரலேகா மீதும் மண்ணெண்ணெய் தெறித்து இருந்ததால் அவர் மீதும் எதிர்பாராத விதமாக தீப்பற்றிக் கொண்டது.

இருவரும் தீயில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com