உ.பி| கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிய கணவன் செய்த கொடூரச் செயல்! நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் என்ன என்று கண்டறிய மனைவியின் வயிற்றை அறுத்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்முகநூல்

மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் என்ன என்று கண்டறிய மனைவியின் வயிற்றை அறுத்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றம்.ஆகவே, இந்த நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்
சென்னை: சொகுசாக வாழ ஆசைப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்கள் கைது!

சமீபத்தில் கூட பிரபல யூடியூபர் இர்ஃபான் துபாய் சென்ற போது, தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்துகொண்ட வீடியோயை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து. தமிழக சுகாதரத்துறையிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.இது ஒரு புறம் இருக்க, உத்தரப்பிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தை கண்டறிய கொரூர கணவர் செய்த செயல் ஒன்று, கேட்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில், கடந்த செப்டம்பர் 1 2020 அன்று , புடானில், வசித்து வருகின்றனர் பன்னா லால் - அனிதா. இவர்களுக்கு ஏற்கெனவே, ஜோடிக்கு ஏற்கெனவே 5 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், அனிதா மீண்டும் கர்ப்பமாகி இருந்துள்ளார். ஆக, உள்ளூர் பூசாரி ஒருவர் அனிதாவிற்கு பிறக்க விருக்கும் ஆறாவது குழந்தையும் பெண் குழந்தைதான் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தையாகதான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி பன்னா அனிதவிடம் சண்டையிடுவதும் , அவரை அடிப்பதும் நிகழ்ந்துள்ளது.. இப்பொழுது, இந்த ஆறாவது குழந்தையும் பெண் குழந்தைதான் என்று பூசாரி கூறியதால் ஆத்திரமடைந்த பன்னா குழந்தையை கருகலைப்பு செய்யுமாறு அனிதாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அனிதா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போது, அனிதாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய அனிதாவின் வயிற்றை அறுத்துள்ளார்.இதனால் துடித்து போனார் அனிதா.

உத்தரப் பிரதேசம்
இந்தியாவில் வங்கதேச எம்.பி கொடூரக் கொலை! துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள்! பின்னணியில் HoneyTrap!

இந்நிலையில், அனிதாவின் சகோதரர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கிருந்து பன்னா தப்பித்துள்ளார். இதனையடுத்து, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனிதா சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அனிதா குணம்பெற்றார் ஆனால், வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதன்பின்னர், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ்பன்னாவின்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அனிதாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றவாளியான பன்னாவிற்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம்
மீம்ஸ் நாயகன் 'கபோசு நாய்’ இறப்பால் சோகத்தில் ரசிகர்கள்! புகழின் உச்சிக்கு கபோசு சென்றது எப்படி?

இந்நிலையில், குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள இவர் செய்த கீழ்த்தரமான செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com