‘ஜீவனாம்சம்’ கேட்ட மனைவிக்கு நீதிமன்றத்தில் வைத்து காதலர் தின கிஃப்ட் கொடுத்த கணவர்; கடுப்பான மனைவி!

திருமணமான 4 மாதங்களில் ‘வரதட்சணை’ கொடுமையால் விரட்டியடிக்கப்பட்ட பெண்... ஜீவனாம்சம் கோரி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து காதலர் தின பரிசு கொடுத்த கணவர்... வாங்க மறுத்த மனைவி... எங்கே நடந்தது? பார்க்கலாம்...
மோதல்
மோதல்freepik

சூரத் வதோதராவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும், அவரது கணவருக்கும் 2020 பிப்ரவரியில் அவர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன சில நாட்களிலேயே அக்கணவர் மற்றும் அவருடைய பாட்டி, தாத்தா இப்பெண்ணிடம் 5 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அப்பெண் வரதட்சனை கொடுக்க மறுத்ததால், திருமணமான 4 மாதங்களிலேயே அதாவது ஜீன் 2020 ஆம் ஆண்டிலேயே அவரை வீட்டை விட்டு அக்குடும்பத்தினர் வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. கணவரும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த அப்பெண், தனக்கு மாதம் 30,000 ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என கோரி சூரத் குடும்ப நல நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளார். அக்கணவர் தனியார் நிறுவனமொன்றில் ஆட்டோமொபைல் என்ஜினியராக உள்ளாரென்றும் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் சந்தித்துள்ளனர். விசாரணையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தன் மனைவியை சந்தித்த அக்கணவர், அவருக்கு காதலர் தின பரிசாக சாக்லேட் கொடுத்துள்ளார். அதனை வாங்க மறுத்த அந்த மனைவி, இது குறித்து தன் கணவரிடம், “என்னை நீங்கள் உண்மையிலேயே நேசித்திருந்தால் ஒவ்வொரு நாளும் நாம் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடி இருக்கலாம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஒருமுறைக்கூட என்னை திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்லவோ அல்லது சந்திக்கவோ எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

மோதல்
மும்பை விமான நிலையம் | சக்கர நாற்காலி போதாமையால் 1.5 கிலோ மீட்டர் நடந்த 80 வயது முதியவர் உயிரிழப்பு

மேலும் இது குறித்து அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவிக்கையில், “தன் மனைவிக்கு காதலர் தினத்தன்று சாக்லேட் வாங்கி வந்து கொடுக்க முயன்றார் அவர். அச்சமயத்தில் அவருடன் அவரின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் என எல்லோரும் இருந்தனர். அனைவரும் அவரை எடுக்க சொன்னார்கள், ஆனால் இப்பெண் உறுதியாக அதை மறுக்கும் முடிவில் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விஷயத்தில் அப்பெண்ணின் செயல், பல விமர்சனங்களை பெற்றுவருகிறது. பலரும் ‘வரதட்சணை கேட்டு அப்பெண்ணை வெளியே அனுப்பிய கணவரின் குடும்பத்திடம் அப்பெண் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்’ என்றும், சிலர் ‘சாக்லேட்டில் என்ன ஆகிவிடப் போகிறது’ என்றும் விமர்சிக்கின்றனர். உங்கள் பார்வை என்ன? கீழுள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு சொல்லுங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com