மீண்டும் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்ட ராகுல், பிரியங்கா...!

மீண்டும் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்ட ராகுல், பிரியங்கா...!
மீண்டும் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்ட ராகுல், பிரியங்கா...!

உ.பி.யில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பட்டியலின பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க ராகுல், பிரியங்கா மீண்டும் கிளம்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸை சேர்ந்த பட்டியலின இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் பலியான இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, நேற்று முன்தினம் அங்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் போலீசாரால் பலப்பிரயோகம் செய்து ஹத்ராஸ் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் ராகுல், பிரியங்கா ஆகியோர் இளம்பெண்ணை இழந்துவாடும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இன்று மீண்டும் ஹத்ராஸுக்கு புறப்பட்டுள்ளனர். ராகுலும், பிரியங்காவும் தங்களது காரிலேயே பயணித்தனர்.

இந்தப் பயணத்தின்போது காரின் இடதுபக்க முன் சீட்டில் ராகுல் அமர்ந்திருக்க, பிரியங்கா கார் ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுடன் எம்.பி.க்கள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கோஷம் எழுப்பியபடி வருகிறார்கள்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையை போலீஸார் மூடியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com