கண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை
கண்களைக் கட்டி அதிகவேகமாக ஸ்கேட்டிங் செய்து கர்நாடகா சிறுமி ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹப்பல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஓஜல் நலாவடே(12). இவர் 7 வகுப்பு படித்து வருகிறார். நாடே இன்று குழந்தைகள் தினம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது இந்தச் சிறுமி ஒரு கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். அதாவது தனது இரு கண்களையும் கட்டிக் கொண்டு அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்துள்ளார்.
இவர் 400 மீட்டர் தூரத்தை 51 விநாடிகளில் கடந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவரது சாதனையை அங்கிகரித்த கின்னஸ் சாதனை அதிகாரிகள் சான்றிதழை வழங்கினர். இந்தச் சாதனையை அவருக்கு மூன்று அவகாசம் கொடுக்கப்பட்டது. மூன்றாவது முயற்சியில் இவர் 51 விநாடிகளில் 400 மீட்டர் தூரத்தை கடந்து அசத்தியுள்ளார். ஏற்கெனவே இவர் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் இந்திய புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய இரண்டு புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.