35,000 பேரை பணிநீக்கம் செய்யும் முடிவு நிறுத்திவைப்பு : ஹெச்.எஸ்.பி.சி வங்கி

35,000 பேரை பணிநீக்கம் செய்யும் முடிவு நிறுத்திவைப்பு : ஹெச்.எஸ்.பி.சி வங்கி

35,000 பேரை பணிநீக்கம் செய்யும் முடிவு நிறுத்திவைப்பு : ஹெச்.எஸ்.பி.சி வங்கி
Published on

35 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹெச்எஸ்பிசி வங்கி, தற்போது அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது.

பிரபல வங்கி சேவை நிறுவனமான ஹெச் எஸ் பி சி, அடுத்த 3 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக பிப்ரவரி மாதம் அறிவித்தது. இது வங்கி ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக ஹெச்எஸ்பிசி வங்கி கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் வேளையில் தங்கள் ஊழியர்கள் பணி தேடி அலைவதை விரும்பவில்லை என வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே வங்கியின் முதல் காலாண்டு லாபம் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் பாதியாக குறைந்துள்ளதாகவும் கொரோனா வைரஸின் தாக்கமே இதற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com