கர்நாடக சிறைத்துறைக்கு புதிய டிஐஜியாக   ரேவண்ணா நியமனம்

கர்நாடக சிறைத்துறைக்கு புதிய டிஐஜியாக ரேவண்ணா நியமனம்

கர்நாடக சிறைத்துறைக்கு புதிய டிஐஜியாக ரேவண்ணா நியமனம்
Published on

கர்நாடக சிறைத் துறையின் புதிய டிஐஜியாக ஐபிஎஸ்  அதிகாரி ரேவண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். 
பெங்களூரு மத்திய சிறையான பரப்பன அக்ரஹாரா  சிறையின் கண்காணிப்பாளர் பணியையும் அவர்  கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான உத்தரவை கர்நாடக உள்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. சசிகலாவுக்கு தனி சமையல்  அறை உட்பட பல சலுகைகள்  அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக டி.ஜி.பி அதிகாரியான சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக்  கூறப்படுவதாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி,   சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்க வேண்டும் என  ரூபா கூறியிருந்தார். இதை டி.ஜி.பி மறுத்திருந்தார்.  இதனையடுத்து  ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்ட  நிலையில், ரேவண்ணா அந்தப் பதவியில்  நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com