\
“அய்யோ நானும் உடனே கத்துக்கணுமே”- மெர்சலான ஹிருத்திக் ரோஷன்

“அய்யோ நானும் உடனே கத்துக்கணுமே”- மெர்சலான ஹிருத்திக் ரோஷன்

“அய்யோ நானும் உடனே கத்துக்கணுமே”- மெர்சலான ஹிருத்திக் ரோஷன்
Published on

ஹிருத்திக் ரோஷனின் வார் பட பாடலுக்கு நடனமாடி கொரோனா நோயாளிகளை உற்சாகமூட்டினார் அசாமை சேர்ந்த காது மூக்கு தொண்டை மருத்துவர் அரூப் சேனாபதி.

பாதுகாப்பு கவச உடையுடன் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்குள்ளேயே ஆடி அசத்தியிருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் வீடியோ தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ரியாக்ஷன் வேண்டி பலரும் அவரை டேக் செய்திருந்தனர். 

அதனையடுத்து  ஹிருத்திக்  ரோஷன் அந்த வீடியோவிற்கு ட்விட்டரில் ரியாக்ட் செய்துள்ளார்.

“மருத்துவர் அரூப்பிடம் சொல்லுங்கள். நான் அவரது டேன்ஸ் மூவ்களை கற்றுக்கொண்ட பின்னர் அவரைப் போலவே அசாமில் அற்புதமாக டேன்ஸ் செய்ய உள்ளேன். TERRIFIC ஸ்பிரிட்” என ட்வீட் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com