train fire accidentpt desk
இந்தியா
தெலங்கானா: ஹவுரா டூ செகந்திராபாத் - பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
தெலங்கானா மாநிலத்தில் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பயங்கர தீ.. விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் ரயிலில் விபத்து ஏற்பட்டது. ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, யாதாத்திரி புவனகிரி மாவட்டம் பொம்மைப்பள்ளி அருகே வந்தபோது, இரண்டு ஏசி பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
fire accidentpt desk
இதையடுத்து உஷாரான பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து கீழே இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்களும் இரண்டு பெட்டிகளில் இருந்த பயணிகளை உடனடியாக கீழே இறக்கிவிட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து யாதாத்திரி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.